அழகான அழுகைகள்

எனக்கு மட்டும்

ஏன் இப்படி.......?

அந்த

புல்லாங்குழல்

அழிக்கப்பட்ட

ஒரு மரத்தின்

அழும் குரலிசையாக...?

எனக்கு மட்டும்

ஏன் இப்படி.......?

உன் கைவிரல்கள்

தாளம் போடும்

தவில்..........

இறந்து போன

ஒரு மாட்டின்

ஒப்பாரி.......?

மரித்துப்போன

மரங்கள் எல்லாம்

இசை எழுப்பும் கருவிகளா...?

இறந்து போன ஜீவன்கள்

ஆத்மாவின் ராகங்களா....?

அழகான இசைகள்

அழிந்து போன உயிர்கள்

அழுகை...அழுகை...அழுகை

எனக்கு மட்டும்

ஏன் இப்படி.......?

......................................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (3-Oct-13, 9:17 pm)
பார்வை : 917

மேலே