காதலிப்போர் கவனத்திற்கு...!

கனவினைக் கொடுத்து
தூக்கத்தைக் கெடுத்து
பாதியில் செல்வாள் பாவை!


பாதையைத் தொலைத்து
பேதையை நினைத்து
வீதியில் விழுவான் கோழை!


சேலைகள் நினைத்தால்...
சோலைகள் காய்ந்து
பாலைகள் தோன்றும்
வேலைகள் செய்திடும்!


காலைகள் இருண்டு
காரிருள் படிந்து
வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!!

எழுதியவர் : ஒருவன் கவிதை (8-Oct-13, 9:19 pm)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 211

மேலே