வேண்டுகோள் !!

பார்வை 1 : எனது வேண்டுதல்
-----------------------------------------------
கருவிலே உருவாகியபோதே
புதுக்கவிதையின் கருவாகினேன்
அதுயென் தமிழ் பித்தம்.
கல்வியாலே புதுப்பித்தபோதே
இலக்கியத்தின் ரசிகனாக மாறினேன்
அதுயென் தமிழ் ரத்தம்.
அறிவிலே உயரும்போதே
சிறுகதையில் மையல் கொண்டேன்
அதுயென் தமிழ் சித்தம்.

நித்தம் நித்தம் குத்தமென்று
உளறி அதட்டும் குசம்பர்களே...!
எழுத்தாளனாக அவதானித்தபோது
பழுத்துப்போன கனியென்று என்மீது
பட்டுத்தெறிக்கிறது உங்கள் கற்கள்.

குறைகளை மட்டும் கூறும் புண்ணியவான்களே..!
உங்களிடமுள்ள கல்லின் ஈரம்
உங்கள் உள்ளத்தில் இல்லையென்றாலும்
குறையேதும் வைக்காமல் தாக்குங்கள்
உங்களின் கற்களுக்கு வலிக்கும் வரை.......
உங்களின் கண்முன் நான் சாதிக்கும் வரை....

*************************************************
பார்வை 2 : நண்பர்களின் சார்பில் வேண்டுதல்
---------------------------------------------------------------------
மரபுக்கவிதை கைப்பிடித்து
புதுக்கவிதை படைக்கிறோம்
சமுதாயத்தின் கறைக்கண்டு
சிறுகதையை எழுதுகிறோம்
அதில் ஏதும் தவறுண்டா.... ?
தாக்க வாருங்கள், வரவேற்கிறோம்
தகர்க்க வாராதீர்கள், வேண்டுகிறோம்

பிழைகளை சுட்டிக்காட்டுங்கள்
பிழைகளை மட்டும் சுட்டுக்காட்டாதீர்கள்-உங்கள்
பிழைகள்கூட நேர்மை இல்லையென்றால்…
உங்கள் புத்தியே பிழையென்றால்…
தயவுசெய்து ஒதுங்கிகொள்ளுங்கள்.
வேடிக்கை பார்க்கும் நல்ல
வாடிக்கையாளர்கள் போதும்.
வேட்கை கொள்வதற்கு நாழிகையாகிறது
தயவுசெய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

*************************************************************************

பி.கு : இந்த படைப்பை பதிவு செய்யவே எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த தளத்தில் எதையும் கண்டு காணமால் இருந்து என் படைப்புக்களில் மட்டும் கவனம் செலுத்தவே விரும்புகிறேன். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகும் அல்லவா…..
மீண்டும் வேண்டுகிறேன்…

நாம் இத்தளத்தில்
படைப்பு அணியாக
ஒரே அணியாக இருப்போம்
பலப்பல அணிகள் எதற்கு?
அதன் பயன்கள்தான் என்ன ?

இதற்கு மேலும் விஷத்தை கக்குவேன்.. நீ யார் என்னை கேள்வி கேட்க என்றால்…….பின்பு நான் என் வழிகளை தேடி பயணித்துக்கொள்கிறேன்.

நன்றி !!

~~~~~~~~~~~~~~~~இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (13-Oct-13, 6:25 pm)
பார்வை : 418

மேலே