மாயமும் மந்திரமும் யாவற்றிலும்

மந்திரமும் மாயமும்
எங்கும் பரவி
மந்திரத்தால் மாங்காயும்
காய்க்கப பண்ணி
ஆணை பெண்ணாக்கி
பரியை நரியாகி
வெட்டுண்டு
பின் கோர்வைக் கண்டு
ஜால வித்தைகள்
காட்டி மகிழ்வித்த
மாயவியைப் போல்
இன்று தொழிலும்
மந்திரமும் தந்திரமும்
வெகுவாகத தெளிய
நேற்று நட்டத்தில்
இயங்கிய வர்த்தகம்
இன்று கொழிக்கிறது என்றால்
மாயங்களின் வெளிப்பாடு தான் .
மாயத்தின் குணம் தான்
ஒரு கேள்விக் குறி?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (14-Oct-13, 9:49 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 312

மேலே