உனக்குள் தொலைந்து போகவா

காத்திருந்து களைப்படைந்து விட்டேன்.
உன் சம்மதம் கொண்டு வா!.
நான் புதிதாய் பிறப்பேன்.

சட்டப்படி இது குற்றம்!
என்பது காதலில் இல்லை,
நீ ஆசைபட்டு
என்னை ஏற்றுக்கொள்
அல்லது........
...........
அவஸ்தை பட்டாவது
ஏற்றுக்கொள்!

வெட்டி போடும்
நகங்கள் கூட மீண்டும்
விரல்களில் இணைவதில்லை.
நீ திட்டி போன வார்ர்த்தைகள்
கூட தினம் என் காதலை
வளர்க்கிறதே!

கஙகையில் குளித்தால்
பாவம் குறையுமா?
என்றெனக்கு தெரியாதடி!
உன் உமிழ் நீரில்
குளித்த என் பெயரே
புண்ணியம் பெற்றதடி,
உன் இதழ் பட்டதால்
என் பெயர் கூட
கண்ணியம் பெற்றதடி.

வரதட்சணை ஏதும் வேண்டாமடி!
வழித்துனையாய் நீ வந்தால் போதும்!.
விபரீதமான பொன்னகை வேண்டாமடி!
உன் விழித்துனையுடன் புன்னகை வேண்டுமடி.

என் இதய கடிகாரத்தில்,
முட்களாய் உன் நினைவுகள்...
உன்னை சுற்றியே
என் காலம் கடக்கிறது.

வண்ணங்களை குழைத்து
வார்த்தையாக்குகிறேன்.
உன் எண்ணங்களை
என்க்கு ஏற்றதாக்கி
வண்ணமாக்கு
என் வாழ்வை.

உன் கண்ணீருக்கு
என் கண்களை தருகிறேன்.
என் புன்னகைக்கு
உன் இதழ்களை கொடு.

கூந்தலை கொடு
மலர்களை நான்
தருகிறேன்.
விரல்களை தருகிறேன்
மோதிரம் நீ கொடு.

மொழி தாண்டி,
மதம் தாண்டி,
இனம் தாண்டி,
இடம் தாண்டி
வருவேன் உனக்காக,
ஆனால் உனை தாண்டி
போக முடியாது.
உடனடியாக ஏற்றுக்கொள்
என்னை இளமை
தாண்டிப்போவத்ற்குள்....



எழுதியவர் : யாழினியன் (10-Jan-11, 5:59 pm)
சேர்த்தது : யாழினியன்
பார்வை : 491

மேலே