அழகின் பிறப்பிடம் என்னவள்தான்
பெண்ணே!
ஒரு சில நிமிடங்கள்
உன் உருவத்தை
என் கற்பனையில் ஓடவிட்டேன்...
உன் விழிப்புருவங்களின்
ஏற்ற இறக்கங்களைக் கண்டு
வீரமங்கைகளின்
விளைச்சலைக் கண்டேன்...
தோல்வியே துவண்டுபோய்
உன்னை நெருங்க வரம் கேட்கும்
உன் சுறுசுறுப்பிடம்...
உன் இதழசைவில்
காற்றும் பிரமித்து நிற்கும்...
கண்ணசைவிற்கு
எந்த கானமும் அடிமையாகும்...
நீ தலைசாய்த்து
பேசும் பேச்சில்
தவழ்ந்து கிடக்கிறது
தஞ்சாவூர் பொம்மை...
உன் நடையின் இலக்கணத்தில்
ஆதிகால இதிகாசங்களையெல்லாம்
நிகழ்காலத்தில்
தோற்கடித்தவள்...
உன்
பளிங்கு முகத்தைக் காண
பகலவனிடம் போராடி
பகல் பொழுதில்
வந்ததடி நிலவு...
உன் காதுமணிகள்
இசை ஒலிக்க
கண்கள் எழுதும் கவிதைக்கு
கைதானவர்கள் கவிஞர்கள்...
பெருமைக்குரிய
பெண்களின் இலக்கணத்தை
மொத்தமாக உன்னுள்
திணித்துவிட்டான் அந்த பிரம்மன்...
சிணுங்கள் பேச்சில்
சிகரம் தொட்டவள்...
சிரிப்பினில்
குழந்தையை வென்றவள்...
உன் கைபடும் பொருட்கள்
காவியத்தில் இடம் பிடிக்கின்றன...
உன் கண்படும் பொருட்களோ
காவியம் பேசுகின்றன...
இத்தனை
பேரழகு படைத்த உனக்கு
உன் எதிர்கால துணைவனாக வர
பலரை போராட்டங்களில் வென்று
உன் அருகில் அமர
ஆசைதான் எனக்கு...
எதார்த்தங்களும்...
ஏமாற்றங்களும் மலர்ந்துள்ள
என் வாழ்க்கையில்...
என் அனைத்து ஆசைகளைப் போலவே
இந்த ஆசையும்
அடி மனதோடு புதைந்தேவிட்டது...