பெண்மை காப்பதே ஆண்மை!!!
கன்னி பெண் அவள் கடவுள் ஆகினள்
தாய்மை கண்டதால், அவள் சிசுவிற்கு!!!
ஆடவன் அவனோ மன்னன் ஆகினன்
தாய்மை கொடுத்ததால் அவள் மனைவிக்கு!
காமம் என்பது கடவுள் போன்றது
காதல் அதனுள் கலக்கும் போது!!!
காதலை கொன்றிங்கு காமம்
புசிப்போர்கள் அக்றிணை போன்றோரல்லவா?
இங்கே மனிதனாய் பிறந்த நாம்
யாது செய்குவோம்? இத்தகு
காம மிருகங்கள் பார்க்கையில்?
வன்முறை எடுப்பதும் அமைதி குலைப்பதும்
உண்மையில் தீர்வு ஆகுமோ? நிரந்தர தீர்வும் கிட்டுமோ?
சிட்டுக்குருவிகள் இரண்டு அலகினை முட்டும்
காதலை அழகாய் ரசிக்கும் நம்முள்ளம்...
ஏனோ கயவர் போல் பார்க்கும் மனிதரில்
இருவர் காதல் கொள்கையில்!!!
முதலில் நம் பார்வை தனை மாற்றுவோம்
பாதிக்கபடுவது யாரோ ஒரு பெண்ணல்ல...
நம்மில் ஒருவராய் வாழும் பாசமிகு தந்தையின் மகள்...
அன்பிற்காய் ஏங்கும் ஒரு மழலையின் தாய்..
சிந்தை தெளிவோம்! சூளுரைப்போம்!!!
பெண்மை காப்பதே ஆண்மை!!!
தாய்மை போற்றுவோம் !
மனிதம் காப்போம்!!!