சங்கமம் ....!!!
வருண பகவான்
விழி திறக்க ....
மேகப் பெண்
முகம் கருக்க ....
வாயு தேவன்
சாமரம்வீச ....
மின்னல் தோழி
விளக்கு ஏந்த .....
நட்சத்திர நங்கையர்
கண் சிமிட்ட ....
இடி நண்பன்
கெட்டிமேளம் கொட்ட.....
சப்தவர்ண வானவில்
வானவேடிக்கை காட்ட....
ஞாயிறு உளம்குளிர்ந்து
வாழ்த்து வழங்க .......
நிலமகளாம் மண்ணில்
வான்மழை சங்கமம் ......!!