ஒரு விரலாய்...மறு குரலாய...இருப்பாயடா..(தொடர்-15---அகன் )
எத்தனை எத்தனை பாவங்கள் காட்டுகிறாய்
அத்தனையும் அகராதிக்குள் அடங்கா ஒளிமுத்திரைகள் ....
எத்தனை எத்தனை ஓசைகள் எழுப்புகிறாய்
அத்தனையும் எந்த அலைவரிசையிலும் அடங்கா
ஒலிக்குறிப்புகள்...
எத்தனை எத்தனை அசைவுகள் செய்கிறாய்
அத்தனையும் எவரிடம் கற்றாய் அதிசயமாய்
எத்தனை எத்தனை முறையில் கை சுழற்றுகிறாய்
அத்தனையும் என்னுள் வலியுண்டாக்குகின்றனவே
எத்தனை எத்தனை மொழிகள் நீ பேசுகிறாய் -அவை
அத்தனையும் என் தமிழ் விட சிறந்ததா சொல்.?
(தொடரும் )