நிராகரித்தாலும் என்றும் உன்னுடனே

என்னவளே!
ஆண்கள் பலபேர்
உன்மேல் போர்தொடுக்க...

நீ வீசிய பதில்களில்
புறமுதுகு காட்டி
ஓடியவர்கள் மத்தியில்
நான் மட்டும் நிற்கிறேனே
ஏன் இப்படி..?

தசைகளை விரும்பும்
கயவர்களிடம்...
உன் மனதை
தொலைத்துவிடுவாயென்ற
அச்சத்தில்...
என்றும் உன்னைச் சூழ்ந்தே
உன்னருகில் நான்...

கட்சிமாறும்
காதலர்கள் நிறைந்த
இந்த உலகத்தில்
என்றும்
உன் நினைவுகளை மட்டுமே
என் உயிராக கொண்டுள்ளேன்...

என் வாழ்க்கையில்
இந்த ஒரு வரம் மட்டும்
போதும் எனக்கு...

கண்ணிழந்த குருடனுக்கு
இருள் மட்டுமே உலகம்...
உன்னைக் கண்ட எனக்கு
நீ மட்டுமே உலகம்

சமுதாயம் கைகாட்டிய
ஆயிரம் காரணங்களில்
சிலவற்றை காரணம் காட்டி
என் காதலை
நீ ஏற்க மறுக்கிறாய்...

பெண்ணே
உணர்ந்து கொள்
மதமெனும் போதையில்
மூழ்கிக் கிடப்பது
உன் பெற்றோர்கள் தானடி
நீயில்லையே!

நீ என் காதலை நிராகரித்தாலும்...

என் கண்ணீர் துளிகளின்
அர்த்தம் புரிந்துகொள்ளாவிடினும்...

உன் தண்டனை அம்புகளை
என்மேல் எத்தனை முறை
வீசினாலும்...

என்றும் உன்னுடன் நானிருப்பேன்
வானவில்லை சுமக்கும் வானமாய்...
எனக்காக அல்ல
உனக்காக...

எழுதியவர் : ஆரியன் (26-Oct-13, 1:17 pm)
பார்வை : 124

மேலே