வேண்டி கேட்பதெல்லாம் நீ மட்டுமே

வாழ ஆயிரம் இடங்கள்
இருந்தாலும்
நான் வேண்டி கேட்பதெல்லாம்
உந்தன் கருவறை மட்டுமே..

எத்தனை உறவுகள் என்னை
தேடி வந்தாலும்
நாளும்
நிலைத்திருப்பது உந்தன்
நினைவு மட்டுமே..

எத்தனையோ வலிகள்
தாங்கினாய்
என்னை
காண்பதற்கு முன்பே ..

நீயே எந்தன் அனைத்தும்
வேண்டி கேட்பதெலாம் உன்னை மட்டுமே..
அன்னையே..

எழுதியவர் : பிரியா கண்ணன் (27-Oct-13, 9:24 pm)
பார்வை : 181

மேலே