வரவேற்பு விழா
(முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவில் , அவனது சீனியர்களுக்கு சமர்ப்பித்த கவிதை )
வரவேற்பு விழா, என அறிவித்து நீங்கள் போட்ட
வானவேடிக்கை , நேற்று இரவே தெரிந்தது
வானத்தில் விண்மீன்களாய் !!
வானம்பாடி பறவைகள் படும் உங்களுக்கான
வாழ்த்து பாடலை !!
உங்களுக்கு ,
நன்றி கூறா ,
நான்கு
நில மன்னர்களுக்கும் தூது அனுப்பி உள்ளேன் .
நெடுந்தூரம் என்பதால் நேரம் ஆகும் - எனவே
நன்றி என்ற சொல்லை நானே கூறுகிறேன்.
இனிதே துவங்கட்டும் ,
இன்னும் ஒரு வாழ்க்கை ,
இந்த கல்லூரி முதல் .