காதலை சுவாசிப்போம் தோழா

காதலை மிதிக்க
பார்க்காதே
மதிக்கப் பார்...

காதல் ஒன்றும்
பூலோகத்தின்
எதிரி அல்ல...

பூலோகத்தை
இயக்கும்
காதல் ஸ்ருதி...

காதலில்லாமல்
எதையும் நீ
ஆராய முடியாது...

அனைத்தின்
மூலமும்
காதலே...

சாதியைக்
கொளுத்தும் தீ
காதல்

மதத்தினை
மறக்கும் மாமருந்து
காதல்...

விண்ணிலிருந்து குதித்து
மண்ணில் மழைத்துளி
உயிரை விடுவது காதல்...

பறவைப் போட்ட எச்சத்தை
மார்பில் தாங்கி
செடியாய் உலகுக்கு
அறிமுகப்படுத்துவது காதல்...

எண்ணும் எண்ணத்தோடு
எழுதும் எழுத்துக்கள்
காகிதத்தில் பயணிப்பது காதல்...

எழுதிய எழுத்துக்களை
அழகிய கவிதைகளாய் தொகுப்பது
தமிழ்மேல் கொண்டக் காதல்...

இப்படி
சொல்லிக்கொண்டேப் போகலாம்
காதல் தலைப்பானால்
காகிதத்தில் பக்கம் போதாது...

இத்துடன்
நிறுத்திக் கொள்கிறேன்
மீண்டும்
ஒருமுறை சொல்கிறேன்...

முடிந்தால்
காதலை சுவாசி
முடியாவிட்டால்
எழுதியாவது வாசி...!

எழுதியவர் : muhammadghouse (29-Oct-13, 2:27 pm)
பார்வை : 79

மேலே