தன்னம்பிக்கை

தன்னம்பிக்கைக்கும் கர்வம், இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது.

"என்னால் முடியும்" என்று நினைப்பது தன்னம்பிக்கை. "என்னால் மட்டுமே முடியும்" என்று நினைப்பது கர்வம். தன்னம்பிக்கை எல்லா சாதனைகளுக்கும் மூல காரணமாக உள்ளது. கர்வம் எல்லா அழிவுக்கும் காரணமான விஷமாக உள்ளது.

எழுதியவர் : உச்சி (30-Oct-13, 3:44 pm)
சேர்த்தது : உச்சிகுடிமி
Tanglish : thannambikkai
பார்வை : 225

மேலே