தேங்காய் வியாபாரம்

விடுமுறையே இதற்க்குத்தான்,
விரும்பத்தொடு விரும்பியவர் ஒன்று சேர.
சேரும் இடமும் பாசத்தின் கொள்ளிடம்.
தாத்தாவும், பாட்டியும், காட்டும் நேசம்,
பள்ளிப் பிள்ளைகளுக்கு, அளவில்லா சந்தோசம்.

சிறு வயது பேத்திகளுக்கு,
பாட்டி வீடு படியளக்கும் கோட்டை.

வீட்டை சுற்றி வகை வகையாய் மரங்கள்.
உயரத்தின் உச்சம் தென்னை என்றல்,
கொடுக்கும் இளநியோ பாலாறு,
பறிக்கும் காய்களோ பல நூறு.

பேத்திகள் வந்த நேரம், தென்னையில்
காய் பறிக்க ஆட்கள் வந்தார்.
மரம் ஏறி மள மளவென காய்கள்
பறித்துப் போட,
திரட்டிப் போட்டனர், சித்தாள் பெண்கள்.
சித்தாள் பெண்களோடு, சிரத்தையாய்
காய் குவித்தனர் பேத்திகளும்.

வீட்டுத் தேவை காய் போக,
மற்றவை வண்டி ஏறி சந்தை சென்றன.

வீட்டுக் காய்களை சின்னம், பெருசு,
தரம் பிரித்தது பேத்திகள்.
பிரித்த கையேடு தாதா, பாட்டி,
சித்தி,சித்தப்பா என்று தரம் பார்த்து
விலை கூறி விற்று ,
கைமேல் காசும் பார்த்தனர்.

விற்றது போக மிஞ்சியது காய்கள்.
இரண்டு வாங்கினால், ஓன்று இலவசம்
என்று சொல்லி அடுத்த கட்ட வசூல்,
களை கட்டியது வியாபாரம்.

அத்தனையும் விற்று தீர்ந்தன.
காய்கள் வீட்டிற்கு,
காசுகளோ பேத்திகளுக்கு.

இது ஒரு விளையாட்டு,
எப்போதும் விளையாடாத விளையாட்டு.
அறியாத வயதில் புரியும் படி,பொறுப்பு கூடும்,
புத்திசாலித்தனமான விளையாட்டு.
பேத்திகளைப் பாராட்டுவோம்.

எழுதியவர் : arsm1952 (2-Nov-13, 1:43 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : thenkaai vyapaaram
பார்வை : 222

மேலே