கடவுளைத்தேடி

கடவுளைத்தேடி
======================================ருத்ரா

கடவுளைத் தேடி
மேகம் கடந்து
விண்வெளிதாண்டி
அங்கே
இருப்பிடம் கண்டு
அவனை நோக்கி
"அழைப்பு மணி"
அழுத்தினேன்.
இங்கே இல்லை
பூலோகம் போயிருக்கிறார்
என்று பதில் வந்தது.
செல்ஃபோன் நம்பர்
ஒன்றும் தந்தார்கள்.
எஸ்.எம்.எஸ்
அனுப்பினேன்
தரிசனம் வேண்டும் என்று.
பதில் வந்தது.
என் செல் அல்லவா
விஷ்ணு சகஸ்ர நாமத்தை
ரிங் டோனில் சொன்னது.

"அட எங்கே இருக்கிறீர்கள்
என் தரிசனம் வேண்டுமா?
வீட்டுக்கு வாருங்கள்."
மனைவின் குரலே
அங்கே ஒலித்தது.

விஷ்ணு அங்கேயா
இருக்கிறார்?
அவசரமாய் வீடு
வந்திட்டேன்.

வாசலில் நாலு பயல்கள்
பற்றிக்கொள்ளவே மறுத்த‌
ஒரு விஷ்ணு சக்கரத்தை
கல்லால் அடித்து
பொறி கிளப்ப‌
வெறி கொண்டு தாக்கினர்.
நமுத்துப்போன சக்கரம்
சொன்னது காதில் ஒலித்தது.
"டேய் விட்டுங்கடா.
உள்ளே மருந்து இல்லை.
வெறும் பேப்பரைத்தான்
சுருட்டியிருக்கிறார்கள்."
இருப்பினும்
சுருளை நீட்டி வைத்து
அந்த செத்த பாம்பை
கல்லால்
அடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு
விஸிஷ்ட அத்வைத‌
"விசுவரூபம்" ஷூட்டிங்க்
என் வீட்டிலா?
நரனுக்குள்ளா நாராயணன்?
நாராயணா க்ஷமிச்சிடு
நாராயணா க்ஷமிச்சுடு

=================================

எழுதியவர் : ருத்ரா (4-Nov-13, 12:20 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 60

மேலே