என் தங்கை

அனைத்தையும் பகிர்ந்துகொண்டேன்
அன்னையிடம் அல்ல

அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டேன்
தோழியிடம் அல்ல

அந்த சண்டை அதிக நேரம் நீண்டதில்லை
கண்ணிமைக்கும் நேரம் போல

அடுத்த நொடி அக்கா என்று வருவாள்
அது நடிப்பும் அல்ல

அந்த அன்பிற்கு இணை
இந்த உலகில் வேற எதுவும் இல்ல......

எழுதியவர் : பிரியா மணி (5-Nov-13, 8:56 pm)
Tanglish : en thangai
பார்வை : 519

மேலே