ம்ருக் த்ருஷ்ணா
![](https://eluthu.com/images/loading.gif)
வானத்தின் புள்ளிகள்
ஒளி நட்சத்திரங்கள்
வாழ்க்கையின் புள்ளிகள்
சிந்தும் கண்ணீர் துளிகள்
புள்ளி கொண்ட மானும்
துள்ளியோடுதடா
கானலை நீரென்று மயங்கி
வாழ்க்கை மாயத் தோற்றமடா
மான் தொடர்ந்த கானலடா !
~~~கல்பனா பாரதி~~~
ம்ருக் ----மான் . த்ருஷ்ணா---கானல் நீர்