அந்தி மெல்ல மயங்கும் நேரம்

கண்ணாடிக் கதவின் பின்னே
தாரகைகள் கண் சிமிட்ட
மேகத்துள் முகம் புதைத்த
வட்ட நிலா எட்டிப்பார்க்க
கரு நிழலாய் உயர்ந்த மரம்
சிலு சிலுத்து அசைந்தாட
மெல்ல மலை இறங்கி வரும் காற்று
மேனி எங்கும் வருடிச் செல்லும் !
எங்கிருந்தோ வரும் குரலாய்
இளைய ராஜா இசை இனிக்க
மார்பை உரசிச் செல்லும் மல்லிகையோ
மின்னலென உயிர் கீறும் !

அந்தி மெல்ல மயங்கும் நேரம்
மொட்டை மாடியில் ஓர் ஓரம் .........!!!

எழுதியவர் : thilakavathy (14-Nov-13, 12:07 am)
பார்வை : 157

மேலே