உன் பிரிவு
கருவிலிருக்கும் குழந்தையின் தவிப்பு;
உழவனின் மழைக்கான ஏக்கம் ;
பாலைவனத்தில் நீருக்கானப் போராட்டம் ;
தோல்வியடைந்த இதயத்தின் வலி ;
காத்திருக்கும் காதலின் மௌனம் ;
ஒன்றுமறியா உள்ளத்தின் குமுறல் ;
பரிட்சையில் ஏற்படும் பதட்டம் ;
இவை அனைத்தையும் ,
ஒன்றாகத் தந்து விட்டது ...................
உன் 'பிரிவு' !