நட்பின் நாட்களில்
வாழ்வின் பக்கங்களை நிரப்பிவிட்டால்
அன்பின் வரிகளால் ..
நான் போனேன் அவளோடு
நட்பின் பாதையில் நலமாக..
நொடிப்பொழுதில் மனம் கவர்ந்தாள்
அழகான அன்பினால்..
கைகோர்த்தால்
நம்பிக்கை கொண்டன என் நாட்கள்
வாழ்வின் மீது..
தோள் சாய்த்தாள்
உறுதுணை கொண்டது
என் இதயம் மகிழ்வோடு ..
அவளென் அன்னையானால்
எனை அனுசரித்து ..
தந்தையானால்
எனை அரவணைத்து...
நான் செய்வதனைத்தும்
ரசித்தால் ,
என் பிழைகளை கூட..
நான் போகும் திசையெல்லாம்
அவளின் பார்வை
என்மீது அக்கறையோடு ..
எனக்காக மாற்றிக்கொண்டாள்
தனக்குப் பிடித்ததை ..
எனக்காகவே ஏற்றுக்கொண்டாள்
எனக்கு மட்டுமே பிடித்ததை..
நினைத்தாலே எதிரில் வந்தாள்,
என் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக ..
செல்லக் கோபம் எனக்காக தந்தாள் ,
சின்ன சண்டை எந்நாளும் கொண்டாள்
நான் அவளுக்கே
சொந்தம் என சொல்லி ..
எந்நாளும் ஒரு விருப்பம்
அவளுக்கு ,
என் மடி சாய
தோள் உரசி
கைகோர்த்து
நட்பின் பாதையில் நடைபோட ..
நான் விரும்பியதை
நேசித்தால் ,
நான் விரும்பாத என்னை
ஆழமாக சுவாசித்தால்.,.
நான் தூங்கிய வேளை
அவள் தூங்க விழி கொண்டாள்
எனை ரசித்து ...
ஆழமான நட்பிலே மூழ்கடிதாள்
மீண்டு வர மனமில்லை
ஆகையால் ,
மீண்டும் மீண்டும் திளைக்கிறேன்...
என் நட்பின் முகவரி அவளானாள் ,
என் நட்பின் பூக்கள்
தினம் பூக்கும்
அவள் புன்னகையோடு ..
வாழ்வின் நாட்கள்
தினம் பேசும்
அவள் நினைவுகளோடு ..
துயிலும் போதும்
உளறும் கவிதை எனக்கு
அவளின் பெயர் ..
என் கவிதைகளில் மலரும் வரிகள்
எங்கள் நட்பின் நாட்கள்..
அவளின் நினைவுகளில்
துயில்வதால்
சோகமான நிமிடமும்
சுமையான நெஞ்சமும் கூட
சுகமாகிறது ..
"முடிந்து விடும் வாழ்வினில்
முடிவில்லாத ஆரம்பம்
நட்பு"..
ஆதலால்
முற்றுபெராமல் தொடரும்
அவளின் நினைவுகளோடு..