அட்ட்ரா சக்கஅடிச்சு ஓட்டு

அட்ரா சக்க அடிச்சான் சொக்க !
விட்ரா மக்கா பிடிச்சான் சவ்க்க!
எட்றா வண்டி இடிச்சான் பறக்க!

அருமை! அருமை !
விடாத புடிச்சுக்கோ!
குறைக்காதே வேகம் !
விசையை இன்னும் கூட்டிக்கோ!
அடி அடி அப்படியே
விலகாம அடிச்சு ஓட்டு!
நேரா! நேரா!நிறுத்தாத
நெக்கி ஒட்டு!நேரா ஓட்டு!

சபாஸ்!சபாஸ்!சரியாத்தான் போகுது.
ஓட்டு!ஓட்டு !ஓடிக்கிட்டே இரு!
அக்கம் பக்கம் பாக்காத!
அதுதான் சரியான பாத
அடிச்சு ஓட்டு!அடிச்சு ஓட்டு !

குமரியன் ஆனாலும்
குணத்தில் நீ ஒரு
குழந்தைதானய்யா!
தமிழா நீ ஒரு தாராளம்!
தோழமை உனக்கு ஏராளம்.

உனக்கும் இதுதான் உகந்த தினம்.
உண்மை நீ ஒரு குழந்தை மனம்.
உரிய வாழ்த்து உனக்குத்தானாம்
அரிய அன்பே எனக்கு நீதானாம்!

எழுத்துத் தளத்தில்
இணைந்த அன்புகளே!
இன்று எல்லோரும் நாம்
குழந்தைகளே!

கள்ளம் மறப்போம்!
உள்ளம் நிறைப்போம்!
அள்ளும் அன்பையே
அள்ளி வழங்குவோம்!

இனிப்பு அதுதான்
இதயம் அதுதான்.
எழுத்தும் அதுதான்.
இன்பம் அதுதான்.

எழுதுச்செல்வங்களே!
என்றும் குழந்தைகளே!
இன்றும் பயில்கிறோம்!
எழுத்துப் பள்ளியிலே!
நின்றும் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (14-Nov-13, 6:44 pm)
பார்வை : 317

மேலே