கவிஞன்

அலுவலகப் பணிச் சுமையால் ஆழ்ந்த - என்
சிந்தனையை அடக்கி நானும் வச்சிருந்தேன்

ஓரிரு வாரங்களா ஒரு வரி கூட தோனலன்னு
உறக்கம் கொஞ்சம் தள்ளிப் போச்சு

களவாணி பய மனசு களவாடி
கவிதை எழுதுன்னு கம்முன்னு சொல்லுச்சு

களவாடுதல் கவிஞசனுக்கு அழகல்ல - என்று
கடுகடுத்தது அதே களவாணி பய மனசு

கண்மூடி படுத்தேன் கற்பனை செய்ய முடியலன்னு
காரி துப்பியது நான் எடுத்து வச்ச காகிதம்
நீ ஒரு கவிஞசனா என்று

இருட்டு நேரந்தானே யாருக்கு தெரியப்போகுது
நான் பட்ட அவமானம்ன்னு
இழுத்து போத்தி நான் படுத்தேன்

எங்கிருந்தோ பாத்து அன்பு என எழுப்பியது
என் அப்பா கொடுத்த எழுதுகோல்

என்னைக் கையில் எடு உன்னைக் காரி துப்பிய
அந்த காகிதத்தை வறுத்தெடு உன் வரிகளால் என்றது

கடைசியாய் கால் கடுக்க பறந்து சென்று பதுங்கியது
மின் விசிறியின் காற்றலையால்
என் கவிதை நிறம்பிய அந்தக் காகிதம்

-------------------அரி.அன்பு---------------

எழுதியவர் : அரி.அன்பரசன் (16-Nov-13, 12:16 pm)
Tanglish : kavingan
பார்வை : 52

மேலே