நானும் ஒரு கருவேப்பிலை

திரும்பி பார்க்கிறேன்
திரும்பும் போது
கண்டேன் எதை
காண வேண்டாம்
என்று நினைத்தேனோ.

கண்டதைச் சொல்கிறேன்
என் வழிப் பாதையிலே
நான் கடந்த வேதனைகளை
மறக்க வேண்டும்
என்று நினைத்தேனோ.


மறந்ததைச் சொல்லுகிறேன்
என் நினவுகளிலிருந்து
நான் அப்பாவியாக
இருந்த நாட்களை
எண்ணும் போது


எனக்கு நடந்த நிகழ்ச்சிகள்
எதை விட்டு கழிப்பது
எதை விடாமல் சேர்ப்பது
சொல்ல முடியாமல்
தயங்குகிறேன்

நான் கண்டது மிகப் பெரிதில்லை
அது ஒரு கருவேப்பிலை
வாசத்திற்கு சேர்ப்பதும்
உபயோகமில்லை எனறு எறிவதும்
அதற்கு வழி முறை.

வழி வழியாக வருவது
கருவேப்பிலைக்கு உவகை
எனக்கும் அதில் உடன் பாடு
என்னுடைய தடமும் அதுவே.
சேர்த்துக் கொள்வதும் விடுதலும்


காலம் ஓடுகிறது வேகமாக
நானும் வாழ்ந்து விட்டேன்
மிகுதியாக சற்றுக் காலம்
வாழ்ந்து விட்டால் கவலை யில்லை
நானும் ஒரு கருவேப்பிலை.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (17-Nov-13, 9:53 am)
பார்வை : 733

மேலே