தாய் மாமா

இன்று
என் தாயும்
என் தாய் மாமாவும்
இறைவனின்
சிறகுகளுக்குள்...

சிறகு ஒடிந்த
கிள்ளைகளாய்...நாங்கள்...

என் 100 வது கவிதையை...
கவி மலராய்
தன்னலம் கருதா
என் தாய் மாமாவிற்கு சமர்ப்பனம்
செய்கிறேன்...

மாமா,

உங்களுக்காய்
உழைக்காமல்
எங்களுக்காய்
உழைத்தீரே...

உங்களுக்காய்
நாங்கள்
உழைக்கும்
வேளையில்...

எங்களின்
வாய்ப்புக்கு கூட
வழி இல்லாமல்...

போட்டது போட்டபடி,
புனிதப்பயணம்
சென்று விட்டீரே...

சொல்லிசெல்லமுடியா
சொர்க்கப்பயணம்
போனீரோ?

இல்லை...
கடமை முடிந்ததென்று
ஊர் வராமல்
சென்றீரோ...

மரணம்
உன்னை நெருங்குதுன்னு
மாமா உனக்கு
தெரியுமோ...

ஜனனம் எந்நாளோ
அந்நாளே...உன் மரணம்
என்று குறித்து
வைத்து வந்தாயோ...

மற்றவர் துன்பம்
கூடாதென்று
படுத்தபடியே பயணம்
சென்றீரோ...

வெளிச்ச முகம்
பார்க்க கூடாதென்று
விடியலுக்குள்
சென்றீரோ...

வேதனையில்
வினவுகிறேன்...
என்ன செய்தது உங்களுக்கு???

எங்களுக்காய்
காலமெல்லாம்
தோள் கொடுத்தீர்,
எங்களை உச்சம் ஏற்ற...
ஆனால்,
உங்களின் பயணத்தில் கூட
தோள் கொடுக்க
நாங்கள் இல்லையே...

தாய்பிள்ளை அரவணைப்பும்
உரிமை பாராட்டும் நட்பும்
உண்மை உழைப்பும்
நேர்மை பண்பும்
உந்தன் அடையாளம்...

நிச்சயம் உங்களின் அடையாளம் காப்போம்...

நான் இருக்கிறேன்
உங்களின் கனவினை
நிறைவேற்ற...

இறைவனை வேண்டுங்கள் இருப்பவர் நலம் பெற...

மன வேதனையுடன் உங்கள் (மரு)மகன்

எழுதியவர் : சலீம் கான் (சகா) (20-Nov-13, 2:14 am)
Tanglish : thaay maamaa
பார்வை : 4308

மேலே