539 கலைக்குக் கலியாண வாழ்த்துக்கள்

கலை -ஹேமா இனிய கலியாண வாழ்த்துக்கள்!

சேரிடம் அறிந்து
சேர்ந்திடும் தோழா!
சேர்வினில் மகிழ்வாய் தோழா!!--இனிச்
சேர்வது நலமே தோழா!

தேர்வினை அறிந்து
தேர்ந்திடும் தோழா!
தீர்வினில் மகிழ்வாய் தோழா! -இனித்
தெரிவது சுகமே தோழா!

ஊர் நலம் அறிந்து
உழைத்திடும் தோழா!
உன் துணை வந்தது தோழா! -இனி
உன் நலம் அவள்நலம் தோழா!

போர்மிகு வாழ்க்கையில்
புகுந்தது அமைதி
புரட்சிகள் புதுப்புதுச் செயலே -இனிச்
சீர்மிகு வாழ்க்கை
சேர்ப்பது நலமே
சேர்ந்து,உழைத்து ஓங்குக தோழா!

பார்,உனைப் பார்க்குது
பக்குவம் கூடுது
பழுதினி இல்லையே தோழா!
பேறினி இருகனி
பெற்றது மகிழ்ந்திடு!
பெருமைகள் சேருது தோழா!

கார்,இறங்குதுபார்!
களர்நிலம் மாறுது
கழனிகள் செழிக்குது தோழா!
வீரம்,இங்கு இனிமேல்
வெறுமையை மாற்றுதல்!
வெற்றியும் தோழமை தோழா!

வாழ்க வாழ்க பல்லாண்டு
வளமும் மகிழ்வும் கைகோர்த்து!

அன்புடன்
எசேக்கியல்

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Nov-13, 3:42 am)
பார்வை : 313

மேலே