காதல்

இந்த கதை நான் ஒரு புத்தகத்தில் படித்தது., இந்த கதை காதலின் ஆழத்தை உணர வைத்தது., வாசகர்களிடம் இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.,


படித்ததில் பிடித்தது.,


ஒரு ஊரில் எழுத படிக்க தெரியாத வாலிபன் வாழ்ந்து வந்தான் .,அவன் கடலோரம் சிறு வீடு கட்டி,தன் பிழைப்புக்காக கடலில் கிடைக்கும் மீனை விற்று வாழ்நாளை ஓட்டுகிறான்.,
அதே ஊரில் அழகான கண் தெரியாத இளம்பெண் வாழ்கிறாள்., அவள் ஒரு அநாதை.,தன் வாழ்நாளை ஆடு மேய்த்து பிழைப்பை நடத்துகிறாள்.,
இவள் ஆடு மேய்த்து கொண்டு தினமும் கடலோரம் வருவதால்,இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது.,,
இந்த பழக்கம் நாளடைவில்,நட்பாக மாறி காதலாகிறது.,
தனக்கு கண் இல்லை என்று அடிக்கடி குறை பட்டு கொள்வாள்.,அதனால் தன் காதலிக்காக போராடி பார்வையை பெற்று தருகிறான்.,
பார்வை கிடைத்ததும், உலகம் மிக அழகாக இருப்பதாக நினைக்கிறாள்.,தன் காதலனை பார்க்கிறாள்.,அவன் மட்டும் அவளுக்கு அழகாக பட வில்லை.,
அவள் தன் காதலனிடம்.,"உனக்கு கண் தெரியாது என்பதை மறைத்து,என்னை ஏமாற்றி விட்டாய்.,எப்படி இந்த அழகான உலகத்தை
எனக்கு காண்பிக்க முடியும்.,என் அழகை ரசிக்க முடியும்.,நீ எனக்கு பொருத்தமானவன் இல்லை" என்று கூறி விட்டு பிரிகிறாள்,
இவன் மனதில்,கவலயுடன் "நீ என்னை பிரிய முடியாதுடி., ஏனென்றால் நீ இந்த உலகத்தை ரசிப்பதே என் கண்ணில் தானடி.,இனி என் உயிர் போனாலும் கவலை பட மாட்டேன்.,நான் உன்னுடன் தான் இருக்கிறேன்.,இருப்பேன்.,நீ எங்க இருந்தாலும் NALAA இருக்கனும் என் கண்ணம்மா!!" என்று கூறி உயிர் பிரிகிறது.,




இந்த கதையை படித்து என் கண்ணில் கண்ணீர் வந்தது உண்மை., இதுவல்லவோ காதலின் மேன்மை.,உண்மை காதல் உள்ள வரை உலகம் உயிரோடிருக்கும்.,காதல் வாழ்க!

எழுதியவர் : elakkiyam (23-Nov-13, 11:54 am)
Tanglish : kaadhal
பார்வை : 228

மேலே