தாஜ்மஹால்

உன்னை உருவாக்கினவர்களுக்கு
இறுதியில் ஏராளமான
செல்வப்பொன் கிடைத்தன...

பயன் என்ன?
உண்ண சோறுபோடும்
உழைப்பை இழந்தார்கள்...

உன்னை விட
அழகை உடையதை உருவாக்கும்
திறமையை இழந்தார்கள்...

தேவையா நீ?

உன்னைப்புகழ்ந்துரைக்கிறார்கள்
காதலர்கள்
ஷாஜகானின் காதல்
புனிதமானது என...

இருபத்தி இரண்டாயிரத்துக்கும் மேல்
அழிந்த காதலைச்சொல்ல எவருமில்லை...

எழுதியவர் : திருமூர்த்தி (28-Nov-13, 7:01 pm)
Tanglish : tajmahaal
பார்வை : 69

மேலே