பிரசவம்
பத்து மாதம் நான் கண்ட கனவு நினைவாகப்போகிற நாள்
என் எலும்புகளை யாரோ உடைப்பது போன்ற ஒரு வலி வந்து வந்து போக
நிற்க முடியவில்லை நடக்கமுடியவில்லை படுக்கவும் முடியவில்லை..
மருத்துவச்சி என்னை நல்ல நடம்மா அப்ப தான் வலி பிடிக்கும் என்றார் ..
இதற்க்கு மேல் கூட வலிக்குமா என்ற கேள்வி ஓடியது ..
ஆறு மணி நேரம் நடந்து
பொறுக்கமுடியாத வலி பிடிக்கவே
பிரசவ வார்டுக்கு ஒருவழியா கூட்டிச்சென்றனர் ...
அம்மா அம்மா என்று என் அம்மாவை மட்டும் நினைத்துக்கொண்டேன் ...
என்னை பெற அவளும் இப்படித்தானே துடி துடித்து போயிருப்பாள் ...
சும்மா சத்தம் போடாதேமா என்று செவிலி கூற
எனக்கு கோவம் வந்தது ..
திருடனுக்கு தேள் கடித்ததுபோல கத்தவும் முடியாமல் வலியை தாங்கவும் முடியாமல்
மனதுக்குள் புலம்பினேன் ..
கழுத்து செரியான வலி ..ஆன்டி தலைகாணி ஒன்னு தரீங்களா என்று கேட்க
சும்மா இருமா நீ என்று அதற்க்கும் திட்டு ...
காலை மணி 5 30, இரவு முழுதும் வலியுடன் போராட்டம் ..
திடீரெண்டு குழந்தை தலை திரும்ப வில்லை அறுவை சிகுச்சை செய்யவேண்டும் என்றார் மருத்துவச்சி ..
எனக்கு தூக்கி வாரிப் போட்டது ...ஆன்டி இதற்க்கா
நான் பொறுமையாக இருந்தேன் ..
இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று கூற
சட்டென்று என் செல்வம் தலை திரும்பவே
வலி இழப்பு மருந்து கொடுத்து ...
கொடுத்ததுதான் தெரியும் ..
நான் இப்பொழுது பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறேன் ....
குச்சி ஐஸ் வாங்கி தின்றுவிட்டு ,பூக்கள் பரித்துகொண்டிருகிறேன் ...
அழுகை சத்தம் ...என் அக்கா என்னை குட்டி குட்டி என்று அழைக்கிறாள் ...
மங்கலாய் என்னவோ தெரிய என் வயிற்ரை தொட்டுப்பார்த்தாள் என் செல்வம் இல்லை ..
ஆன்டி என்ன குழந்தை, என்ன குழந்தை சொல்லுங்க ப்ளீஸ் என்றேன் ..
பொண்ணுமா என்றார் ...
என்ன பொண்ணா பொண்ணா ...என் மனதில் சொல்லமுடியா சந்தோஷம் ...
பார்க்கணும் என்றேன் ...
என் செல்வதை காட்டினார் ...
இன்று அவளுக்கு நான்கு வயது ...
இன்று கூட நான் ஆச்சர்யமாக யோசிப்பது
அந்த உயிர்போகும் வலியில் கூட
நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை ...
இயற்கையே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லையடீ ...
.
.