பெண்

பெண்

குலம் தழைக்க வந்தவள்
பிறர் குறை தீர்க்க வந்தவள்

பெண் ஆணுக்கு
ஒரு தாயாய்
ஒரு தாரமாய்
ஒரு தமக்கையாய்
ஒரு தோழியாய்
பன் முகம் கொண்டு
பிறருக்காக தன்னை மாற்றிக் கொண்டவள் .

தன் ஆசையை கணவணுக்காக விட்டு கொடுத்து
தன் வார்த்தையை பிள்ளைகளுக்காக விட்டு கொடுத்து
தன் உயிரை உழைப்புக்காக கொடுத்து
இப்பூமியில் வாழ்பவள் பெண்.

அவளின் கண்ணிர் இல்லமல்
குழந்தை பிறந்திருக்குமா
அவளின் தியாகம் இல்லாமல்
ஒரு ஆண் ஜெயித்து இருக்கமுடியுமா
இல்லை
அவளின் கருணை இல்லாமல்
தான் இந்த உலகம் செழித்திருக்குமா .

வாழையடி வாழையாக
வாழ வழி கொடுத்தவள்
தன் மாணத்திற்காக மதுரையை
சுட்டு எரித்தவள்
படுத்த படுக்கையாய் இருக்கும் கணவனை
கோலுன்றி சென்று சோறு ஊட்டுபவள் பெண்
இத்தனை செய்தும்
நாம் என்ன செய்து விட்டோம்
என்று கூறி
தன் வேலையை தொடர்ந்து கொண்டே
இருக்கிறாள் பெண் .

எழுதியவர் : கண்மணி (29-Nov-13, 5:39 pm)
Tanglish : pen
பார்வை : 136

மேலே