என் அண்ணனுக்கு

வெவ்வேறு அன்னை மடி கொண்டேமே
வேசமில்லா பாசம் அதை கண்டோமே

கண்டதனால் இன்பம் அது பெற்றோமே
காவியங்கள் பாடாத கவி ஆனோமே

ஆனதனால் வாழ்வு அது மலர்ந்தோமே
ஆகாயமெங்கும் கவிதை பல வரைந்தோமே

வரைந்ததினால் பல ஞானம் கண்டோமே
வாராத புகழ் எல்லாம் பெற்றோமே

பெற்றதினால் மனம் இன்று மகிழ்ந்தோமே
பெருமைகள் பல இங்கு கண்டோமே

என் அண்ணா
நீ கிடைத்த நாளில்
என் மறு ஜென்மம்
உணர்ந்தேன்

உன் வார்த்தையில்
என் சோகம்
மறந்தேன்

என்னுள்
இருக்கும் கவியை
அறிந்தேன்

பிறை நிலவாய்
வந்த மகள்
பௌர்ணமியாய்
ஆனேன்

நன்றி என்று
சொல்லிடவோ

சொல்லிவிட்டால்
முடிந்திடுமோ

முடிவென்பதே
இல்லை அண்ணா

அண்ணனின்
அன்பு
தந்தாய்

அன்னையின்
பாசம்
தந்தாய்

தந்தையின்
கவனிப்பு
தந்தாய்

நண்பனின்
துணை
தந்தாய்

இந்த
நிலவின்
பிழை
பொறுத்தாய்

அதை
பிறர் அறியும்முன்
எடுத்துரைத்தாய்


எனக்கு
தெரிந்தவை
எல்லாம்
சேர்த்து

உனக்கு ஒரு
கவிதை
அண்ணா

எழுதியவர் : நிலா மகள் (2-Dec-13, 7:36 pm)
Tanglish : en annanukku
பார்வை : 1578

மேலே