பெண்ணின் நிலை
கட்டிய தாலி உண்மை
என நம்பினாய் நீ!
அவனோ மறந்தான்
உன்னை.
உன் விழியில் அம்பு பட்டு
கண் கலங்கியதென்ன!
கலங்கிய கண்ணில் சிந்திய நீரில்
வானம், பூமி
இரண்டும் நனைந்தது.
துன்பம் என்பது ஆணுக்கல்ல!
அன்றும் இன்றும் பெண்ணுக்கே
என்று இரவு விடியும்......
அப்போது
உன் தோட்டத்தில்
பூக்கும்
பூக்கள்.............