ஐயோ ஐயோ சரியான முட்டாள்

எங்கள் புவியியல் ஆசிரியர் சரியான முட்டாள்...
ஆமாம்
அன்று அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது,
என் நண்பன் ஒருவன்,''சார்...இரவு நேரம் எப்படி வருகிறது?'' என்று கேட்டான்...
அதற்கு,''சூரியன் மறைந்து விடுவதால்தான் இரவு நேரம் வருகிறது'' என்று சொன்னார் ஆசிரியர்...
எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது...
என் கனிமொழியே...
உன் விழிகள் துயில்பெற்று விடுவதால்தான் இரவு நேரம் வருகிறதென்று கூட தெரியவில்லை அவருக்கு...
ஐயோ... ஐயோ...
எங்கள் புவியியல் ஆசிரியர் சரியான முட்டாள்!!!

எழுதியவர் : வசந்தா (6-Dec-13, 6:58 am)
சேர்த்தது : VASANTHA
பார்வை : 122

மேலே