இரு கோப்பையும் ஒரு காதலும்

நாளை களை கடன் வாங்கி
உன்னை நினைக்கின்றேன்
அழுதுக் கொண்டே முகம் பார்த்தாலும்
என் கருவிழி கண்ணாடி -உன்னை
சிரித்த முகமாய் பிரிதிபலிக்கும்

வழக்கமான பெண்களை விட
நீ வித்தியாசப்பட்டே இருந்தாய்

என் பார்வைகளை ஒரு போதும்
உன் கண்கள் உதாசீனப்படுத்தியதில்லை


தொலைவில் தோழிகளோடு தமிழிலும்
அருகில் வருகையில் ஆங்கிலத்திலும்
நீ பேசி என் செவிகள் கேட்டதில்லை

அழகிய ஆண்களுக்கு ஒரு செண்டி
மீட்டரும்
என் போன்றவனுக்கு ஒரு மில்லி
மீட்டரும் சிரிக்கும்
ஒருதலை உதடுகள்
உன்னிடம் இல்லை

ஓரு தேனீர் இடைவேளையில்
உன் காலணிகளுக்கு கேட்டுவிடக்
கூடாதேன்று
உன் காதுகளுக்கு மட்டும்-என்
காதலை சொன்னேன்

முதல் முறை தேனீர்
கசக்கிறது என்றாய்

இவ்வளவு நாகரீகமாக
காதலை நிராகரித்தவள்
எவளும் இருக்க முடியாது

துக்கம் தொண்டை குழியில்
கூடுக் கட்டியது

ஓரு நிமிடம் நில் என்றாய்...

உண்மையாகவே தேனீர் கசத்தது
உன் உதடுகள் உரசாததால் என்றாய்

துக்கம் தொண்டை குழீயில்
தூக்கிட்டுக்கொண்டது

எழுதியவர் : ப.சத்யா (7-Dec-13, 2:55 pm)
பார்வை : 66

மேலே