நகைச்சுவை 11
ஒரு திரைப்படப் பாடல். "நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்" ன்னு. அவக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு. அதனால தானோ என்னவோ திருமணம் ஆகாத பெண்களைக் கண்டால் இந்தப் பாடல் அவன் நினைவில் வந்து விடும். அவன் அவளைக் கண்டான். அவளும் கண்டாள் அவனை. ஆமாம் .. அதே மாதிரி தான். கம்பன் சொல்லவில்லையா .. ஸ்ரீராமன் நடந்து செல்ல, உப்பரிகையில் நின்று ஜானகி பார்க்க, இருவர் உள்ளமும் விரும்பியதால், திருமணம் நடந்தது. அது போலவே தான். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது பொய்யல்ல. உண்மை தான்.
ஒரு நாள் ..
அவள் எதற்கோ கோபித்துக்கொள்ள, அவன் அவளை உற்சாகப் படுத்த நினைத்து, "நீ கோபமாக இருக்கும் பொழுது மிகவும் அழகாகவே தோன்றுகிறாய் கண்களுக்கு" என்று சொல்ல, அந்த க்ஷணத்திலிருந்து இன்றும் கூட அவள் கோபமாகவே இருக்கிறாள்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்றால் இது தானா .. குரு ஜி ?