என் உதட்டோரம் ஒரு புன்னகை

பட்டுப் பூச்சியைப்
பிடிக்க எத்தனித்தேன் அது
பட்டென எனக்கு முன்னே
தன் இனமோ என்று
என் மலர் கூந்தலில்...!

என்னை வருடும் காற்றைப்
பிடிக்க எத்தனித்தேன் அது
என் மேல் ஆடையைப்
பறித்துக் கொண்டு
எட்டிப் பார்த்து ரசித்தது
மேல் வானில் அசைந்தே ...!

சமுத்திரத்தைப் பார்த்து
அலைகளை என்னோடு அனுப்ப
விண்ணப்பம் விட்டேன்
என்னிடம் மன்றாடி என்
பாதங்களை வணங்கிவிட்டு
மறைந்து கொண்டது இனத்தோடு...!

மின்னலைப் பிடிக்க
என் பார்வையை வீசினேன்
அது எனக்கு முன்னே
அம்பெனப் பறித்துக் கொண்டது
எம் விழிகளைக் கொத்தாக ...!

வயலோரம் நடந்து வந்தேன்
வரப்போர மயிலினங்கள்
என்னோடு தோகை விரித்து
ஆட மறுத்தன எவ்வினமென்று...!

எழுதியவர் : ஜெயா ராஜரெத்தினம் (10-Dec-13, 3:56 pm)
பார்வை : 540

மேலே