தென்றலே தூது செல்வாயா

என்னுள்
விளைந்து முதிர்ந்த
விழு முத்தான
என் கண்மணி...

பொறியியல் துறைதனை படித்தே
செறிவுறும் அறிவும்
செழுமையும் வலிமையும்
பெறுவதற்கே
பெற்றவளை விட்டே
பிரிந்தே சென்றுள்ளாள் ....

என் இல்லமும்
என் மனமும்
ஏக்கத்தோடு அவளையே
எண்ணுகின்றன ....

தென் மேற்க்கு
பருவக்காற்றோ என்
தேகம் தீண்டி
அவளின் ஸ்பரிசத்தை
உணர்த்துகிறது .....

அவள்படித்திட்ட
நூல்களெல்லாம்
காற்றில் ஆடி
என்னை பார்பார்
என்கின்றன ....

அவளின்
சிறுபருவம் தொட்டே
சிரித்து விளையாடிய
மரப்பாச்சி பொம்மையோ
பரண் மீதே கேட்பாரற்றே
கிடக்கிறது .........

அவள்ஆளான
நாள்முதலாய்
ரசித்து மகிழ்ந்திட்ட
கரடி பொம்மைகளோ
கண்சிமிட்டியே
தொட்டுபாரேன்
என என்னை
தொடவைக்கின்றன ....

அவள்
ஓடியாடும் முற்றம்
முற்றத்தில்
கூடுகட்டி வாழும்
கரிச்சான் குருவிகளோ
தன்குஞ்சுகளோடு
தாவி தாவி குதித்தே
அவைகளின் மொழிகளில்
அளவளாவுகின்றன.......

என் தோட்டத்து
மலர்களில் மல்லிகையோ
இதழ் விரித்து
குறுநகை பூக்கிறது
முல்லை முறுவலித்தே
எதையோ முணுமுணுக்கிறது......

ரோஜாவோதென்றலின்
ஆளுகைக்கு உட்பட்டே
தலை சாய்த்து சாய்த்து
துள்ளி குதிக்கிறது
மார்கழி மாத பூக்களோ
மங்கை எனைபார்த்தே
கொய்து தொடுப்பாயா
என் கூக்குரலிடுகின்றன ........

ஆகாயத்தை நோக்குங்கால்
ஆயிரமாயிரம் பிம்பங்களாக
அழகு தேவதையான அவளை
அகக்கண் முன்னே
நிழலாட செய்கின்றன ....

தென்றலே
வண்ண வண்ண
பண் இசைத்தே எனை
பாடாய்படுத்துவதை விடுத்தே
பரிதவிக்கும் தாய்க்காக
தூது செல்வாயோ ........?

என் மகள்
உண்ணாமல் உறங்காமல்
உயிர் மூச்சென என்னையே
நினைத்திருப்பாள் ..........!!!

அவளிடம் சொல்வாயா உன்
அன்னை சுகமே என்று ........!!!

எழுதியவர் : umamaheswarikannan (10-Dec-13, 10:54 pm)
பார்வை : 605

மேலே