அம்மா

உனது புன் சிரிப்பு
புரியவில்லை
முத்தமிட்டேன்
முகம் தடுத்தாய்
விலகிச்சென்றேன்
முந்தானை பிடித்திழுத்து
முனு முனுத்தாய்
தனிமையில் விட்டு செல்லாதே
என்று மவுனமாய்
கட்டிலில் கிடந்த உன்னை
கட்டி அனைத்தேன்
என் மார் கட்டிலின்
மீது ................
மார் சூடலில்
சுகமாய் உறங்கினாய்
மறுபடி விழித்தாய்
மன்றாடி அழைத்தாய்
இடையினை பற்றி
மடியினில் படுத்தாய்
மார்ப்பருகினாய்
மடினனைத்தாய்.............
நிராடி நெற்றிட்டு
பூமுடித்து
புடவையணிந்தேன்
கட்டிலில் கட்டியணைத்து
சண்டையிட்டாய்
கைவளை உடைத்தாய்
கண்டித்தேன்
கண்டு கொள்ளவில்லை
நீ.................................
கடுமையாய் முறைத்தேன்
கண்மறைந்துபோனாய்
தேடி பார்த்தேன்
தெருவெங்கும்
தெரியவில்லை நீ ...............
வீதியெங்கும் பார்த்தேன்
வெறிச்சோடி கிடந்தது
பதறிப்போனேன்
கதறியழுதேன்
காணவில்லை-நீயென்று
கதவின் பின்புறம்
இருந்துகட்டியனைதாய்
முகமெல்லாம் முத்தமிட்டேன்
மூச்சோடு மூச்சு கலந்தேன்
பேச்சின்றி
பேசட ஒரேஒரு
வார்த்தை ...........அம்மாவென்று