உன்னால் முடியாதா தோழா

உன்னால் முடியாதா தோழா ?
உன்னால் முடியாதா ..?

காதல் இன்றி வாழ
கவலை இன்றி வாழ
தோழமையோடு வாழ
தோள்கொடுத்து வாழ
உன்னால் முடியாதா ?

உலகே உனக்கு சொந்தம்
அந்த வானமே உன்தன் பக்கம் !

அக்னி சிறகுகளை கொண்டு பற
அழுது புலம்பும் வாழ்கையை மற!

கனவுகள் நிறைய வேண்டிய
கண்களில் ,
கண்ணீர் நிறையலாமா?

சுடர் விடும் சூரியனாய் உதயமாகு !
கவலை மேகங்கள் உன்னை மறைக்கலாம் !
உன் ஒளி பட்டாலே
ஒதுங்கி விடும் அவை!

கலைந்து போகும் மேகங்கள்
உன்னை கலங்க வைக்க முடியாது!

இரும்பென இதயம்கொள் !
அன்பு பொழியும்
உள்ளங்களிடம் மட்டும்
இளகிவிடு!

மழலையின் மனதுகொள்!
உன் தாய்க்கு
என்றும் நீ மழலை தான்
புரிந்துகொள்!

உன் வாழ்க்கை உனதல்ல
அது...
உன் தந்தையின் கனவு!
உன் அம்மாவின் ஆசை!

இலட்சியத்தை தேடி போகிறாய் ,
கனவுகளை மட்டும் சுமந்து செல் !
கவலைகளை அல்ல !

புயலை கண்டு தயங்கதே !
பூவை கண்டு மயங்காதே!

தொல்லைகள் தொடர்ந்து வரும்!
எல்லைக்குள் இரு!

தடை பல தேடி வரும்!
தன்னம்பிக்கை என்னும்
படை கொண்டு அதை அழிதுவிடு!

வீர நடை போட்டு செல் தோழா!
வெற்றி வெகு தொலைவில் இல்லை!


இவன்,
நிலவின் நண்பன்!

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (16-Dec-13, 10:10 am)
பார்வை : 125

மேலே