காதலென்னும் சோலையினில்23

அதிகாலையில் கண்விழித்த கவிதாவுக்கு புது இடம் என்ன செய்வதென்று அறியாமல் சிறிது நேரம் தனது அறையிலேயே உட்கார்ந்து விட்டு மெல்ல தன் குழந்தையை பார்க்க செல்வது போல் சென்றாள் அங்கு குட்டி ராஜா துங்கிக்கொண்டிருந்தான் அவனை பார்த்து தலையை வருடி ஒரு முத்தம் கொடுத்து விட்டு சமையல் கட்டை நோக்கி சென்றாள்...............


அங்கு அத்தை வேலை செய்து கொண்டிருந்தாள் அதைபார்த்த கவிதா நான் ஏதாவது செய்றேன் கொடுங்க அத்தை என்றாள் அதற்கு நீ முதலில் இந்த காபியைகொண்டு ராஜசேகரனுக்கும் கொடுத்து நீயும் குடித்து விட்டு வா அப்புறம் வேலை எல்லாம் செய்யலாம் என்றாள் கவிதாவோ வேறு வழியில்லாமல் காபியை எடுத்து சென்றாள்..............



ராஜசேகரனின் அறை திறந்து இருந்தது உள்ளே சென்றவள் அவனை அங்கு காணாததால் பாத்ரூமில் இருப்பான் என்று நினைத்து அழைக்காமல் அந்த மேஜை மீது காபியை வைத்து விட்டு வெளியே வந்தாள்.......................



அவர்கள் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக இருந்தது அப்படியே தோட்டத்தை சுற்றி பார்க்கலாம் என்ற ஆசையோடு கையில் காபி குவளையோடு நடந்தாள் கவிதா.


தோட்டத்தில் விதவிதமான பூக்களும் விமரிசையான செடிகளும் மூலிகைகளும் அடர்ந்த மரங்களும் குரோட்டன்ஸ் போன்ற விதவிதமான செடிகளும் கண்ணை பறிக்கும் வண்ணம் இருந்தன........


தோட்டத்தின் ஒரு மூலையில் காய்கறி கீரை செடிகளும் அடுத்த பக்கம் விதவிதமான வகை வண்ணங்களில் பூக்களும் மணம் பரப்பிக்கொண்டிருந்தன இன்னொரு பக்கம் மூலிகை செடிகள் வாசத்தை வீசிக்கொண்டிருந்தன.....................


பூக்களை தேனீக்கள் சுற்றுவதும் செடி மரங்களில் குருவி, மைனா, அணில் என ஓடுவதுமாக இயற்கை வனப்போடு எழிலுடன் காணப்பட்டது அந்த தோட்டம்......................


ஒரு பக்கமாக சுற்றி அந்த அழகை ரசித்து வந்த கவிதாவுக்கோ மனதில் உள்ள கவலையெல்லாம் மறந்தே போய்விட்டது அவ்வளவு அழகு!!!!!!!



தோட்டத்தின் நடுவே ஒரு குளமும் சுத்தமாக பரிமாறப்படுவது போல் அழகாக காட்சி அழித்தது அதன் பக்கத்தில் ஒரு பெரிய மரம் ஒன்று அழகாக இருந்தது குள்ளமாக நிறைய கிளைகளுடன் சிறிய பூக்களுடன் ஒரு வித வாசத்தை வீசிக்கொண்டிருந்தது அதை ரசித்துக்கொண்டே அதன் அருகே சென்ற கவிதாவால அவள் கண்களையே நம்ப முடியவில்லை........................

மரத்தின் இன்னொரு பக்கம் ராஜசேகரனுக்கும் இன்னொரு பொண்ணுக்குமான உரையாடல்.....................

எழுதியவர் : (17-Dec-13, 11:26 am)
பார்வை : 246

மேலே