என் கடந்த கால நினைவுகள்

தோட்டத்தில் நின்று கொண்டு
யாரும் பார்க்காமல் !
கல் எடுத்து
வில்லில் வைத்து !
மாங்காய் ஒன்றை
தட்டி !
என் சட்டை பையினுள்
வைத்து கொண்டு !
நானும் என் நண்பனும்
ஓடி போய்
யாருக்கும் தெரியாமல் !
மாங்காவை
வைத்துவிட்டு !
என் வீட்டுக்கு வந்து
உப்பும் வத்தல் பொடியும்
கொண்டு போய் !
என் நண்பனோடு
நானும் அதை உண்டு!
என் வாயில் எச்சினை
ஊரும் நினைவுகள் !
இன்னும் என்னை
விட்டு போகவில்லை !
என்
கடந்த கால நினைவுகள் !