அனலில் தவிக்கும் புழுக்கள்

வெல வாசிய கேட்டாக்கா
முழி பிதுங்குதுடா சாமி...!

ஐயையோ பேயி
அடுத்த வருஷம் ஸ்கூல் பீசு....!

பயந்துபோன அப்பா மூஞ்ச
பாத்து நானும் இப்படி ஆனேன்...!

மூச்சு மட்டும் இலவசம்னு
மூளைக்குள்ளே நெனச்சிருந்தேன்.....

சிசேரியனுக்கு ஆன செலவ - உன்
சித்தப்பனா கொடுப்பான்னு அப்பா கேட்டார்...!

அய்யய்யோ காச வச்சி
அகிலமே விளையாடுதே.......

அப்பாவி நான் என்ன செய்வேன்....?
பப்பர பப்ப்ரன்னு முழிக்கிறேனே....!!

கந்து வட்டி கணக்கு பாத்தே இந்தக்
காலம் என்னை வளக்குதே.....!

காலன் கையில் பாசக் கயிறா இந்தக்
காசு கழுத்தை நெரிக்குதே.......!

கடவுளே காப்பாத்து - இந்தா
காசு உனது உண்டியலுக்கு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Dec-13, 4:55 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 69

மேலே