நாகூர் கவிக்கு பிறந்தநாள்

(பிறந்த நாள் : 26-12-2013 )

எந்த திசையிலிருந்து
இந்த தளத்திற்கு
வந்தது இந்த கவி..!

வந்த திசை நோக்கி
சந்தோஷ தென்றலாய்
கேள்வி தூது அனுப்பினேன்.

பதில் வந்தது
என்னவென்று ?

உறவு என்றால்
பறந்து வரும் குருவி.
நட்பு என்றால்
நாடி வரும் கவி.
எனதுயிர் நண்பன்
நாகூர் கவி!

நண்பா !!

எட்டு திசைக்கும்
பட்டு விரிப்பாய்
நட்பு பார்வை வீசுகிறாய்

தித்திப்பு கவி எழுதி
மத்தாப்பு மகிழ்ச்சி நிரப்பி
மல்லிப்பூ வாசமாய்
எழுத்து தளமெங்கும்
கவி வாசனை
பரப்பும் நண்பனே !!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். !!

மென்மேலும் புகழ் அடைந்திடு
பண்பாடும் தமிழால் சாதித்திடு

வாழ்க நண்பா,,,, வளர்க உன் கவிப்பா !!


இப்படிக்கு
உன் நண்பன்
இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Dec-13, 2:31 pm)
பார்வை : 534

மேலே