சர்வர்

ஒரு ஹோட்டலில்

சாப்பிட வந்தவர் :ஏம்பா சர்வர் சாப்பிட என்ன இருக்கு .?
சர்வர் : இட்லி, வடை, புரி, வெங்காய பஜ்ஜி அப்புறம்

சாப்பிட வந்தவர் : போதும் போதும் ...அப்போ ரெண்டு உளுந்த வடியும் ரெண்டு வெங்காய பஜ்ஜியும் கொண்டுவா ...

சர்வர் : இந்தாங்க சார் நீங்க சாப்பிட கேட்டது அதுக்கான பில் ...

சாப்பிட வந்தவர் : என்னப்பா உளுந்து வடைக்கு 20 ரூபா போட்டுருக்க பரவா இல்லை... ஆனா !!!வெங்காய பஜ்ஜிக்கு ஏம்ப்பா 50 ரூபா போட்டுருக்க?

சர்வர் : சார் உளுந்த வடைக்கு உளுந்து பக்கத்து கிராமத்ல இருந்து வருது ஆனா வெங்காயம் டெல்லில இருந்தில்ல வருது அதனாலதான் விலை அதிகம் ...

சாப்பிட வந்தவர் : தம்பி உன்ன யாரு டெல்லி வெங்காயத்துல பஜ்ஜி போட சொன்னது எனக்கு நீ உள்ளூர் வெங்காயத்துல போட்டாலே போதும் அதனால எனக்கு இந்த வெங்காய பஜ்ஜியே வேணாம் நான் வர்றே ...

மறுநாள் ..

சாப்பிட வந்தவர் : என்னப்பா இருக்கு ?

சர்வர் :
டெல்லி வெங்காய பஜ்ஜி......
உளுந்தூர் பேட்டை உளுந்து வடை ....
கோயமுத்தூர் அரிசி சோறு ..
பொள்ளாச்சி காய்கறி சாம்பாரு ..
புதுச்சேரி புடலங்கா கூட்டு......அப்புறம்

சாப்பிட வந்தவர் : ஏம்ப்பா இப்படி சொல்றிங்க ..

சர்வர் : பின்ன என்ன சார் வெங்காயத்தோட விலை ஏறி டிச்சின்னு சொன்னா அத புரிஞ்சிக்காம சில வெங்காயங்க... அந்த ஊர் வெங்காயம் வேண்டாம் இந்த ஊர் சட்னி இருக்கான்னு கேட்டு உயிரை எடுக்குறானுங்க அதனால தான் இப்படி...
அடுத்து .. இன்னொரு மாதிரி சொல்றதுக்கு உள்ள TRAINING நடந்துகிட்டு இருக்கு ...

சாப்பிட வந்தவர் : அது எப்படி ..

சர்வர் :
டெல்லி வெங்காய பஜ்ஜி செஞ்சது கைப்பக்குவம் காரைக்குடி அண்ணாச்சி ......
உளுந்தூர் பேட்டை உளுந்து வடை சுட்டது கூடுவாஞ்சேரி ஊர்மிளா ....
கோயமுத்தூர் அரிசி சோறு பண்ணது பாண்டிச்சேரி செண்பகம் ..
பொள்ளாச்சி காய்கறி சாம்பாரு பக்குவமா வெச்சது பவளமேடு பாண்டி ..
புதுச்சேரி புடலங்கா கூட்டு கூட்டுறவு உறப்பினர் கந்தசாமி ......
.........................அப்புறம்

சாப்பிட வந்தவர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சாமுவேல் (28-Dec-13, 10:59 am)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே