காற்றைக் கண்டேன்

காயவைத்த துணிகளின் அசைவு
பறக்கும் பட்டத்தின் ஆட்டம்
காற்றாலை விசிறியின் சுழற்சி
வயல்வெளிகளில் நெற்பயிரின் அசைவு

நீர்த்தேக்கங்களில் நீரின் அசைவலை
இலைகளின் கலை ஆட்டம்
தேசியக் கொடியின் துடிதுடிப்பு
உறங்காத கடலின் அலைகள்

இவைகளில் மட்டுமல்ல
என்னவளின் கூந்தல் கலைத்த
காற்றைக் கண்களால் கண்டேன்...!

எழுதியவர் : அலெக்சாண்டர் (28-Dec-13, 11:24 pm)
பார்வை : 78

மேலே