நம்புவோம்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

அல்லவை யெல்லாம் அகன்றிடவும்
அரசியல்சூழ்ச்சிகள் அழிந்திடவும்,
தொல்லைகள் யாவும் தொலைந்திடவும்
தோல்வி யில்லா வாழ்வுபெறவும்,
நல்லவர் வாழ்வு மேம்படவும்
நாட்டில் ஊழல் ஒழிந்திடவும்,
நல்லதே எங்கும் நிலைத்திடவும்
நம்புவோம் நடக்கும் புத்தாண்டிலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Dec-13, 10:11 pm)
பார்வை : 189

மேலே