அழகு,,,

அழகு

வாலிபம் தொடங்கியதை
வரைந்து சொன்ன
மீசை அழகு

நெத்தி தொடும்
கேசம் தனை -
என்னை கண்டு
கோதுதல் அழகு

கண்பார்த்து
நிற்கும்போது
நான் பார்க்கையில்
விண் பார்க்க
விழி மாற்றுதல் அழகு


என் நிழல் போல
நெடுந்துரம்
எனை தொடர்தல்
அழகு


வியர்வை
வழிந்தபடி
தன் முதல்
காதல் சொல்ல
தயக்க நடை அழகு

தைரியம் பெற்று
சொன்ன முதல்
வார்த்தை அழகு

என் சுடும்
பார்வை
எதிர் நோக்க
கண்ணில் வரும்
பயம் அழகு

என் பார்வை
மண் பார்க்க
மனதில் மொழியை
என் புன்னகையில்
அறிதல் அழகு

அறிந்த கணமே
"ஆயுள் நீ" என
உரைத்தல் அழகு

இரவு பகல்
உரையாடல்
அழகு

இடையிடையே
சண்டைகள்
அழகு

தவறில்லை
என்றபோதும்
கேட்க்கும்
மன்னிப்பு அழகு


பகுதி நேர
வேளையில்
பணம்
சேர்த்தல் அழகு

அதில் வாங்கி
தந்த முதல்
பரிசு அழகு

என் பெற்றோர்
தனை பார்த்து
மணம் பேசுதல்
அழகு

மணவறையில்
மணி தாலி
எனக்களித்தல்
அழகு


மங்கை என்னை
குழந்தையாய்
பாவித்தல்
மிக அழகு






(வைகை மணி அவர்களின் கவிதையிலிருந்து என் கற்பனை)

எழுதியவர் : நிலா மகள் (2-Jan-14, 3:05 pm)
பார்வை : 135

மேலே