அழகும் மணமும்

அழகும் மணமும் ஓரிடம் வாழும்
அதிசயம் செய்தான் இறைவன்.
ஈர்க்கும் இரண்டையும் உன்னிடம் தந்தவன்
ஊர்க்கும் பயந்தே ஒளிந்தான்.
மணக்கும் மல்லிகை அழகை மறந்தவன்
உனக்குக் கொடுத்து ரசித்தான்.
வாடா மல்லி வாசம் மறந்தவன்
வழங்கி உனையே வரைந்தான்..
இரண்டில் ஒன்று எது இருந்தாலும்
ஈர்ப்புக்கு அதுவே போதும்.
இயற்கை நியதி மீறிப் படைத்தவன்
என்னைக் கொல்லவோ நினைத்தான்.!
கோடி மலர்கள் ஊட்டி மலையிலே
ஓடி ஒளியுதே உன்னாலே.
கூடிஉன் மடியில் நான்கிடக் கையிலே
தேடிஎன் னுயிர்திரும் பட்டுமே!
கொ.பெ.பி.அய்யா.