அகமும் தேகமும் சுகமடையும்

காத்திருக்கும் கன்னியவள் ​
களைத்ததன் காரணமென்ன
களையான முகத்தில் கவலை ஏனோ !

சோர்வாய் இருப்பதேனோ
சோலை குயில் வாடுவதேனோ !
சோகமும் வழிவதும் ஏனோ !

காளையவன் காத்திட வைத்தானா
காலையும் மாலையாய் மாறியதோ
கதிரவன்மறைந்து நிலவும் வந்ததா !

அந்திப் பொழுதும் அதிகாலை ஆனதோ
அன்றியும் அதனை உணராதது ஏனோ
அளவிலா ஆவலும் அடங்காததும் ஏனோ !

வந்திடும் பாதையை நோக்குவதேன்
தந்திடும் சுகத்தை நாடி இருப்பதேன்
காத்திடும் உன் காலமும் கரைவதேன் !

அழகு சிலையே உறங்கி ஓய்வெடு
அவனும் வருவான் அணைத்திடவே
அகமும் தேகமும் சுகமடையும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Jan-14, 10:48 pm)
பார்வை : 198

மேலே