கருவறைக்கதறல்கள் - பூவிதழ்
கருவறைக்கதறல்கள் !
கயவர்களே
நீங்கள் அடிக்கடி கழுவ
நாங்கள் என்ன கழிவறைகளா ?
கருவறையின் புனிதத்தை
இருட்டறையில் தேட
விதிகளை மீறுவோருக்கு
விதிவிலக்கா விடுதியும் , வீதியும்
பசிஎன்று வந்தால்
பகலொன்றும் பார்ப்பதில்லை
பழி ஒன்று வரும்போது
சதியொன்று செய்து
விதியென்று கொல்வதேன்?
கொச்சைப்பட்ட உறவுகளின்
மிச்சம்மட்டும் இங்கே
விதியின் வழியே வீதியில் !
இனியேனும் இருட்டறை என்றால்
இடம்பிடிக்கட்டும் உறை
இருபாலருக்கும் (பொதுவாய் )
இறைவா தருவாய் நிறைவாய்
உறவுள்ள உயிர்மட்டும் கருவாய் !
காசு கொடுக்காமல் கிடைக்கும்
கருத்தடைகளை கவனியுங்கள் !
கருவறைக்கதறல்களை நிறுத்துங்கள் !